போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விஜய், திரிஷாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, இன்று (மே 20) சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலக உதவியாளரை சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்தார்.
அந்தப் புகார் மனுவில், கோகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா மற்றும் விஜய ஏசுதாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவேண்டும்.

அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
பாடகி சுசித்ரா கூறிய குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் சமூகத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.