மேஷ ராசி :
நட்சத்திரம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
கிரகநிலை – ராசியில் ராகு
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – சப்தம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
- 29-03-2023 அன்று லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
- 22-04-2023 அன்று குரு பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்
- 08-10-2023 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
- மேஷ ராசி அன்பர்களே செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த
- ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- கிடைக்கும் வாய்ப்புகளைபயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள்.
- உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள்.
- நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நல்ல மாற்றங்களை தரும்.
பொது பலன்கள்:
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் உள்ளவர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும்.மேலும் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள் அமைப்பு உள்ளது.
இந்த நிலையில் வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உயரவும் வாய்ப்புண்டு. மேலும் அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும்.
மேஷ ராசி அரசியல்வாதிகளுக்கு, ஒரு முக்கியப் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். மேலும் அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம். இதனை தொடர்ந்து கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும்.மேலும் அவ்வவ்போது நீண்டதூர பயணம் மேற்கொள்ளப்படும்.
மேஷ ராசி பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. மேலும் மாணவர்கள் புகழுடன் பொருளும் பெறுவர்.மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி உண்டாகும். தொலைதூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.இந்த ஆண்டு இனிய ஆண்டு.
நட்சத்திர பலன்கள்:
அஸ்வினி:
- புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
- உங்கள் பணி சரிவர இருந்து வரும்.
- இந்த ஆண்டு தகுதிவாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு.
- அன்றாட காரியங்கள் செவ்வனே செய்வது நனமையை தரும்.
- தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது.
- உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு.
- பெரியோர்களது நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம்.
பரணி:
- இந்த ஆண்டு தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு வியபாரத்தில் அதிக அளவான லாபம் நிச்சயம் உண்டு.
- பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது.மேலும் பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம்.
- எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள்.
- பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம்.எனினும் அது தானாகவே சரியாகிவிடும்.
- அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
கிருத்திகை 1ம் பாதம்:
- பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது.
- இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு.தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
- வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
- உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம்.
- பெரியோர்களின் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். தொல்லை குறையும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
மேஷம் ராசிகாரர்கள் செல்லவேண்டிய திருத்தலங்கள்:
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகர், குல தெய்வம், ஸ்ரீ பெருமாள் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.