தயிர் வியாபாரியிடம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தயிர் வியாபாரி, சித்திக், கடந்த 9-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.டி.எம் மையம் ஒன்றில் பணம் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.
சிடிஎம் மையத்தின் வெளியே கையில் வாக்கிடாக்கியோடு நின்றவர் தன்னை போலீஸ் என சித்திக்கிடம் கூறியுள்ளார்.
சித்திக் வைத்திருந்த பணம் குறித்து விசாரித்தவர், அவரிடம் இருந்த 34,500 ரூபாயை பறித்துக் கொண்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்துக்கு வந்து ஆவணங்களை காட்டிவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
அதனால் சித்திக்கும் பணத்துக்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் காவல்நிலையம் சென்றார்.
அங்கிருந்த போலீசார் சித்திக் கூறிய தகவலைக் கேட்டு, அப்படி யாரும் வரவில்லையே என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் சித்திக்குடன் ஏ.டி.எம் மையத்துக்கு சென்று அங்குள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர். அப்போது சித்திக் கூறியது உண்மை என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: தகாத உறவு வில்லங்கம்; 2-வது மனைவி கொலை – கணவனுக்கு வலை
இதனைத் தொடர்ந்து சித்திக்கிடம் புகார் எழுதி வாங்கிக் கொண்டவர்கள், சிசிடிவியில் இருந்தவர் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சித்திக்கிடம் பணத்தைப் பறித்தது போக்குவரத்து போலீசார் என்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் ஐ.சி.எஃப் காவல்நிலைய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியிடம் விசாரித்தனர். மேலும் சித்திக்கும் அவரை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
ராமமூர்த்தி, தனது குடும்பத்துடன் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்..?