சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. காவல்துறையினரும் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.சித்திரை திருவிழாவின் போது பட்டாகத்தியுடன் ரவுடிகள் உலா வந்தார்கள் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் செயின் பறிப்பு வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கூட்ட நெரிசலில் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மொத்தமாக சித்திரை திருவிழாவின் போது நான்கு பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ ஆறுதல் சொல்லவில்லை. சித்திரை திருவிழாவிற்கு அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்ளவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் அரசு நிவாரணம் வழங்கி உள்ளது முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
அதேபோல் சித்திரை திருவிழாவில் உயிர் இழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சென்னையில் குளத்தில் சிக்கி ஐந்து சிறுவர்கள் பலியாகினார். கலாச்சாராய சாவுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் போது கொடுக்கப்படவில்லை.
ஜல்லிக்கட்டை தடை செய்தது ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிபதியாக இருந்த கிறிஸ்தவ நீதிபதி பானுமதி. ஜல்லிக்கட்டு காளை மாடுகளை காட்சிப்பட்டியலில் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி. சோனியா காந்தியின் கிறிஸ்துவ ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு எதிர்பாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். தற்போது வந்து இனிப்பு வழங்கி ஜல்லிக்கட்டு தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.இவர்களெல்லாம் மாட்டுக்கறி தின்பவர்கள். மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தியவர்கள்.
அதே மாதிரி பல பேர் மாட்டுக்கறி விருந்து வீரமணி எல்லாம் மாட்டுக்கறி விருந்தே நடத்தினார்.கம்யூனிஸ்ட் கட்சியினரும் நடத்தினார்கள் அவர்களெல்லாம் ஜல்லிக்கட்டு வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள். இது மிகவும் தவறானது கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு இந்து தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி.இனிமேல் அனைத்து விதமான ஜல்லிக்கட்டு போட்டிகளும் தடை இல்லாமல் நடத்தலாம். என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக அர்ஜுன் சம்பத் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.