கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். சுமார் 40 நிமிடம் நடந்த விசாரணையில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதாக கலாத்ராவின் நிர்வாகிகள் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று ஆஜராகுமாறு கலாச்சேத்ரா நிர்வாகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் குமரி முன்பு கலாஷேத்ராவின் இயக்குனர் மற்றும் துணை இயக்குநர் ஆஜராகி பாலியல் புகார் குறித்து விளக்கம் கொடுத்தனர்.
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகளிடம் கடந்த 31ம் தேதி மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி விசாரணை நடத்தினார்.
ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு வகையான புகார்களை தெரிவித்துள்ளனர். ஜூம் செயலி மூலம் ஒரு 5 மாணவிகளிடமும், நேரில் 12 மாணவிகளிடமும் விசாரணை செய்துள்ளேன். மாணவிகள் தெரிவித்துள்ள புகார்கள் குறித்து அறிக்கையில்தான் கூற முடியும்
இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளவர்கள் கல்லூரி மாணவிகள், எனவே அதை வெளியில் சொல்லக்கூடாது. என்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறியுள்ள புகார்கள் அரசிடம் சமர்ப்பிக்கும் அறிக்கையில்,
நிச்சயம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று கலாச்ஷேத்ராவின் நிர்வாக குழுவை சேர்ந்த 3 பேர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர்.
மாணவிகள் புகார்கள் மற்றும் அது தொடர்பாக நிர்வாகத்தின் விளக்கம் போன்றவற்றை இணைத்து தமிழ்நாடு அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.