பிரதமர் நரேந்திர மோடி சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் சென்று விவேகானந்தர் (vivekanandart)சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை வந்த பிரதமர் சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து விவேகானந்தர் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்துக்குச் சென்று 30 நிமிடங்கள் தியானம் செய்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடிபுத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய மோடி விவேகானத்தர் (vivekanandart)வழங்கிய முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும் பெண்களுக்காக விவேகானந்தர் வலுத்திய திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.பின்னர் பிரதமர் மோடிக்கு, நினைவுப் பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது.
முன்னதாக பிரதமர் மோடி வருகையையொட்டி,மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் பொது மக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.