குழந்தைகள் மத்தியில் தடுப்பூசிகளின் பின்விளைவுகள் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்ந்து வந்துள்ளதாக மாநில மருத்துவ ஆய்விதழ் ஆய்வில் தெரியவந்துள்ளது-
ஒவ்வொரு ஆண்டும்,தடுப்பூசி செலுத்திய பின் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல், உயிருடன் இருக்கும் 1,00,000 குழந்தைகள் மத்தியில் நிகழும் மிக மோசமான தடுப்பூசி பின்விளைவுகள் விகிதம் 2015-16ல் 0.71% என இருந்தது,2023-24ல் 4.71%ஆக அதிகரித்திருப்பதாக, “மாநில மருத்துவ ஆய்விதழில்”வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசியின் பின்விளைவுகளை ஆராயும் மாநில/மாவட்டக் குழுக்கள் 2007ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் குழுவில், பொதுமருத்துவர்கள்,குழந்தைகள் மருத்துவர்கள், குழந்தை பிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் மற்றும் இருதயத் துறை நிபுணர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்தக் குழுவினர் இந்திய குழந்தைகள் மருத்துவர் குழு(IAP)மற்றும் இந்திய மருத்துவர்கள் குழு(IMA ஆகியவற்றுடன் இணைந்து தடுப்பூசியின் பின்விளைவுகளை ஆய்வுசெய்வர்.
கடந்த மார்ச் 2014 முதல் மார்ச் 2024 வரையிலான 10 ஆண்டு காலத்தில் இந்தக் குழு 60 முறை தடுப்பூசி செலுத்திய குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசியின் காரணமாக ஆயிரத்து 887 மிக மோசமான பின்விளைவுகள் நடந்துள்ளதாக பதிவுசெய்துள்ளது.
அவற்றில் 1,684 பின்விளைவுகள் குறித்து,கலந்தாலோசனை செய்யப்பட்டதில், 47.8% பின்விளைவுகள் தடுப்பூசி தொடர்புடைய பொருட்கள் காரணமாகவும், 39.3% பின்விளைவுகள் தற்செயலான நிகழ்வுகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரம், தடுப்பூசி குறைப்பாடு காரணமாக எந்த பின்விளைவுகளூம் நிகழவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
அதே போல்,தடுப்பூசியின் காரணமாக எழுந்த சிறு பின்விளைவுகளும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகவும் மாநில மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2011-12 ஆம் ஆண்டு, 95.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டபோது 2,671 பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும், 2023-24ல்(பிப்ரவரி வரை) 146.42 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில், 46,369 சிறு பின்விளைவுகள் நிகழ்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
“இது தடுப்பூசிகளின் பின்விளைவுகளை கண்டறிவதில் தமிழகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை காட்டுவதாக” தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
ஆனால், துறைசார்ந்த மருத்துவ நிபுணரான-ஜேக்கப் ஜான் போன்றோர் மாறுபட்ட வேறுவிதமான கருத்துகளை முன்வைக்கின்றனர்.
1)தடுப்பூசி பின்விளைவுகள் குறித்தான புரிதல் சற்று அதிகமானாலும், தடுப்பூசி பின்விளைவு தரவுகளின் தரம்,பின்விளைவுகளை உறுதிபடுத்தும் ஆய்வுகளின் முழுமை/நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அவை திருப்திகரமாக இல்லை.
இதையும் படிங்க: “வட தமிழகத்தில் இன்றும், நாளையும்..” வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
2)தடுப்பூசி பின்விளைவுகளின் அனைத்து உண்மை புள்ளிவிபரங்களும் வெளிச்சத்திற்கு வருகிறதா?என்ற ஐயப்பாடு உள்ளது.
3)எல்லா தடுப்பூசி பின்விளைவுகளையும் விழிப்புடன் இருந்து பதிவுசெய்ய போதுமான ஆட்கள்/உள்கட்டமைப்பு வசதி தமிழகத்தில்/இந்தியாவில் உள்ளதா?….
போன்ற முக்கிய கேள்விகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
நடிகர்.விவேக் அவர்களின் தடுப்பூசிக்குப் பின் ஏற்பட்ட மரணத்தில், பிரேத பரிசோதனையைக் கூட தமிழக அரசு/சுகாதாரத்துறை விதிகளின் படி செய்ய முன்வராத போது இறப்பு தடுப்பூசி காரணமாக நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணங்கள் காரணமாக நிகழ்ந்ததா?என கண்டறியக்கூட முடியாத சூழல் ஏற்பட்டது என்பதே வேதனையான உண்மை.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை,”தடுப்பூசி பின்விளைவுகளை கண்காணித்து,கண்டறிதலை மேம்படுத்துவது,வெற்று வார்த்தைகளாக இல்லாமல்,நடைமுறையில் செயல்பாட்டில் தீவிரம் காட்டினால் சிறப்பாக இருக்கும்”. என்று மருத்துவர் வீ.புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.