school opening dateதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்றன.
இதனால் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இன்னும் விடுமுறை அளிக்கப்படவில்லை.இந்த சூழலில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: RTE 2024 – 25 : தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.