பிரபல யூடியூபரை நடிகை சுனைனா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 18, 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடிகை சுனைனா பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இதனை தொடர்ந்து வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பு முடித்தார்.
செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து மாசிலாமணி , வம்சம் , நீர்ப்பறவை , சமர் , வன்மம் , தெறி , நம்பியார் உள்ளிட்டப் படஙகளில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் மம்முட்டி எடுத்த போட்டோவுக்கு இவ்ளோ மவுசா..? முழு விவரம் இதோ..
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை சுனைனா பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ,” கடந்த சில நாட்கள் முன் நடிகை சுனைனா தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.
ஆனால் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபரைப் பற்றிய தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள இருக்கும் அந்த நபரைப் பற்றிய தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வரும் துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரியை சுனைனா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்கள் முன்பு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
யூடியூபர் கலித் அல் அமேரி தனது யூடியுப் சேனலில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.