தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இலியானா டிகிருஸ் தற்போது தான் அம்மாவாகப்போவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைப் பதிவு செய்து வருகிறனர்.
2006 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான தேவதாசி மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை இலியானா, அதே வருஷத்தில வெளியான கேடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் கால் பதித்தார். இதையடுத்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவருக்கு இந்த படம் வணிகரீதியான வெற்றியைக் கொடுத்தது. தனது நடிப்பினால் மக்கள் மனசைக் கவர்ந்த அவர் பல FILMFARE AWARDSUM வாங்கிக் குவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து 2012 இல் அனுராக பாசுவின் நகைச்சுவை திரைப்படமான பர்ஃபி மூலம் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைந்த நடிகை இலியானாவுக்கு இந்த படம் பாலிவுட்டில் மகத்தான வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்து வந்த நடிகை இலியானா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீப்போன் என்பவருடன் தொடர்பிலிருந்து வந்துள்ளார்.
‘எப்போதும் சிறந்த கணவராக இருப்பவர்’ என அவரை தனது இன்ஸ்டாகிராமில் இலியானா குறிப்பிட்டு இருந்தாலும் அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்பது குறித்து வெளிப்படையாகப் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு இந்த நட்பு முடிவுக்கு வந்தது என, சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். இதன்பின் சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசல் ஜோடியுடன் மாலத்தீவில் இலியானாவும் ஒன்றாக காணப்பட்ட புகைப்படங்களும் வெளிவந்தன. அதில் கைப்பின் சகோதரர் செபாஸ்டியனும் ஒன்றாக காணப்பட்டார்.
இந்த நிலையில், என்னுடைய குட்டி டார்ஜிலிங்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என இன்று தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் “AND SO THE ADVENTURE BEGINS” எனவும் , “அம்மா” என்றும் கூறி இரண்டு படங்களை நடிகை பகிர்ந்துள்ளார். அதுமட்டும் அல்ல அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் “COMING SOON” எனக் கூறி பகிர்ந்திருந்தார்!
இது SOCIAL MEDIA பக்கங்களில் VIRAL ஆகி வருகிறது.தனது குழந்தையின் தந்தை யார் என்ற அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் இலியானாவின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவாறு comment செய்தாலும் சிலர் இவர் அம்மாவாகப்போகும் இலியானாவுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.