உத்தரபிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்தியாவிற்கு இந்திய மக்கள் போதும் என்று சொல்லுகின்ற அளவிற்கு, ஒரு சரியான தீர்ப்பை தந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 40/40 என்ற பெரியளவில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்க்கு காரணம் யார் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,” டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதில், உத்திரபிரதேச மாநிலத்தில் 80/80 தொகுதிகளை கைப்பற்றும் ஏன் என்றால் அங்கு மோடி அலை இருப்பதாக தெரிவித்த அவர், 40 தொகுதிகளில் கூட அவர்களால் வர முடியவில்லை..
இதையும் படிங்க: கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்! நடந்தது என்ன?
எப்படி பாஜக ஆட்சி ,அதுவும் உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யாநாத் முதல்வராக உள்ள மாநிலத்தில் 40 தொகுதி கூட கைப்பற்ற முடியவில்லை என்று கேட்டதற்கு,,” உத்தரபிரதேச மக்கள் பாதி பேர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர்.
இதனால் சுயமரியாதையுடன் வந்த அவர்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்ததால் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் மீம்ஸ் -ல் தெரிவித்து இருந்தார்.