டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு அச்சம் காரணமாக தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துருக்கியில் ஏற்பட்ட அதி பயங்கர நில நடுக்கத்த்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கட்டிட குவியல்களுக்குள் சிக்கி உயிரிழந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்தது.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், நியூஸ்லாந்து, இந்தியா உள்பட பல நாடுகளிலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவது பலரையும் அச்சத்துக்குள்ளக்கி உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் ஒருசில பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாகத் கூறப்படுகிறது.
இந்த அதிர்வினை உணர்ந்த நடிகை குஷ்பூ, பதறியடித்து தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து சாலையில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.
நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பாஜகவில் இருந்துவரும் நடிகை குஷ்பூ டெல்லியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், டெல்லியில் 4 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும், இதனால் மின்விசிறிகள்,
விளக்குகள் அசைந்தன என்றும், இதனால் பதறியடித்து, தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து சாலையில் வந்து தஞ்சம் அடைந்ததாகவும் தெரவித்துள்ளார்