உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலோன் மஸ்க்(Elanmusk) மற்றும் ஆசியாவின் பணக்கார கௌதம் அதானி(Adani) ஆகியோர் ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி குறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதானியின்(Adani) பங்குகள் வீழ்ச்சியின் தாக்கம்:
இந்திய பங்குச்சந்தையில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மோசமாக உடைந்தன. மேலும் கௌதம் அதானி தலைமையிலான அதானி பவர், அதானி வில்மர், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் மற்றும் அதானி கேஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிந்ததால் அதானியின் நிகர மதிப்பும் பாதிக்கப்பட்டது. அதானியின் நிறுவன பங்குகள் தொடர் சரிவை கண்டதால் தற்போது கௌதம் அதானி உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்லா பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி :
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும்(Elanmusk) பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியால் மஸ்க்கின் நிகர மதிப்பு $15.5 பில்லியன் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு 223 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. டெஸ்லா இன்க். பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. திங்களன்று, நிறுவனத்தின் பங்கு விலை 8.61 சதவீதம் சரிந்து 242.40 டாலர்களை எட்டியது. இருப்பினும், டாப்-10 பில்லியனர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதல் இடத்தில் தக்கவைத்துள்ளார்.
முகேஷ் அம்பானி:
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, டாப்-10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது இந்திய தொழிலதிபரான ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பும் சரிந்துள்ளது.இந்திய தொழிலதிபரான அதானியின் நிறுவன பங்குகள் தொடர் சரிவை கண்டதால், சுமார் 79 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை அவர் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு 821 மில்லியன் டாலர் குறைந்துள்ளது, இதன் மூலம் அவரது நிகர மதிப்பு 81.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து ,புளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியல் தகவலின்படி,
அதேபோல், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 8.6 சதவீதம் சரிவை கண்டதால், சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி 4-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.