டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆட்சியமைப்பதா? எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதா? என இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தபட உள்ளது.
18 வது மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்து உள்ளனர். இந்த நெருக்கடியான சூழலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பாஜகவும் ஆலோசனை நடத்தியது.
இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில், எஞ்சிய 542 தொகுதிகளில் வாக்குகள் எனப்பட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் குறைவான இடங்களை மட்டுமே பெற்றது.
பாஜகவால் 240 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது கடந்த தேர்தலை விட வலுவான நிலைக்கு வந்த காங்கிரஸ் மொத்தம் 99 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக கூட்டணியில் 16 தொகுதிகளை வென்று சந்திரபாபு நாயுடு, 12 தொகுதிகளை வென்ற நிதீஷ் குமார் ஆகியோரின் மீது நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்திய நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆட்சியமைப்பதா? எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதா? என இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தபட உள்ளது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்வில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.