Thirumavalavan- மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி உள்ளிட்ட 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.அதனை தொடர்ந்து, இன்று மீதமுள்ள 263 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இன்று மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,” மீண்டும் 2 வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,” தங்களது இருக்கை பக்கத்தில் செங்கோல் உள்ளது . செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல.. யார் பக்கமும் சாய கூடாது. நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக நீதி தவறாமைக்கு சான்று ஆகும்.
இந்த இருகையின் அழகே நீதி தவறாமை ஆகும். கடந்த காலங்களில் சிறப்பான அவை தலைவராக செயல்பட்டுள்ளிர்கள். ஆனால் ஆளுக்கட்சிக்கு ஆதரவாகவும் , எதிர்க்கட்சிக்கு வேறு மாதிரியாகவும் செயல்பட்டு உள்ளீர்கள் என்பது உண்மை .
ஆளுங்கட்சி என்பது ஆட்சி அதிகாரதோடு இருக்கிற கட்சி . ஆகவே ஆளுங்கட்சி சார்பு நிலை இருக்கக்கூடாது என விசிக எம்.பி. திருமாவளவன் தெரிவித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது மைக் அணைக்கப்பட்டது.
மேலும் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அதிருப்தி அடைந்தனர். இதானல் சபாநாயகருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.