தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய சீமான் போன்றவர்கள் மீது இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசியல் ஆலோசகரான பிரசாத் கிஷோர் கேள்வி உள்ளார்.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊட்டங்களில் வீடியோ பரவி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் வரை செல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதீஷ் குமாரைத் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் அது போலியான வீடியோ என்றும் பொய்யான வீடியோ பரவியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பின்னணியில் பாஜக தான் இருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. பின்னர் இது போன்ற அவதூறு வீடியோ பரப்பிய நபர்களையும் தமிழ்நாடு காவல்துறை கைது செய்தனர்.
மேலும் இது போன்ற தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான எச்சரிக்கையும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விடுபட்டு இருந்தது.
இந்த நிலையில் தான் அரசியல் ஆலோசகரான பிரசாத் கிஷோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசிய வீடியோ ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
All those who used fake videos to incite hate & violence must be dealt with as per the law.
But this doesn’t absolve those who’re openly calling for violence against #Hindi speaking people in #TN
Why no action against likes of @SeemanOfficial for their vitriolic utterances? pic.twitter.com/vyu2EkjBQu
— Prashant Kishor (@PrashantKishor) March 10, 2023
அதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வடமாநிலத்தவர்கள் எல்லாம் பெட்டியைக் கட்டிக் கொண்டு சென்று விடுவான், கஞ்சா ,கற்பழிப்பு ,பாலியல் தொல்லை என 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே வைத்து சோறு போடாமல் செய்தால் அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்று விடுவர் என அந்த வீடியோவில் சீமான் பேசியிருந்தார்.
இந்த நிலையில் போலி வீடியோ வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் , ஆனால் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் வகையில் அழைப்பு விடுபவர்கள் இதில் அடங்குவதில்லை எனவும் மேலும் சீமான் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் ,வழக்கும்,பிரசாந்த் கிஷோர் கேள்வி உள்ளார்