ராகுல் காந்தி லாரியில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடியையும் மோடி சமூகத்தையும் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது .
இதனால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிபோனது , பதவிபோனாலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ராகுல்காந்தி கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதனையடுத்து கர்நாடக அரசியலில் 224 தொகுதிகளில் தனிபெருபான்மையுடன் 113 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் , லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் வகையில் ராகுல் ஒரு லாரியில் பயணித்துள்ளார்.
மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி ராகுல்காந்தி டெல்லி சண்டிகர் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்துமிடம் &சாலை ஓர உணவங்களுக்கு சென்று லாரி டிரைவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.