ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், அதை மெய்ப்பிக்கும் வகையில், இஸ்ரேல் வார் ரூம் X தள பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சரவை சகாக்களுடன், அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திரும்பியபோது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் மாயமானதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் கடும் பணிமூட்டம் காரணமாக, ஈரானின் ஜல்பா பகுதியில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
மீட்புப்படையினர் உடனடியாக செல்லமுடியாத நிலையில், ட்ரோன்களை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டதில், விபத்து நிகழ்ந்து உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்தனர். இந்த நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பயணித்தவர்களும், உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்து 17 மணி நேரத்துக்குப் பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழந்த செய்தி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
எக்ஸ் தளப் பக்கத்தில், இஸ்ரேனில் வார் ரூம் ஒன்று பதிவிட்டுள்ள செய்தி, இந்த விபத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி உள்ளதா என்னும் கேள்வியை எழுப்பி உள்ளது.
ஈரான் அதிபரை காணவில்லை என்று தகவல் வெளியாவதற்கு முன்பே, இஸ்ரேலின் வார் ரூம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஹெலிகாப்டரின் சிம்பலைப் பதிவிட்டுள்ளது.
அதே போன்று மரணச் செய்திக்கு இரங்கல் தெரிவித்துள்ள பதிவில்,
கடந்த மாதம் இஸ்ரேலிய குடிமக்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவிய பயங்கரவாத ஆட்சியின் ஜனாதிபதியின் திடீர் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.
நாங்கள் ட்வீட் செய்த ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இஸ்ரேல் வார் ரூமின் இந்தப் பதிவு குறித்து நெட்டிசன்கள் பலரும், இந்த விபத்துக்கும், இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இதுபோல் பதிவிட்டிருப்பதாக சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவும் தனது கொந்தளிப்பை காட்டியது.
இஸ்ரேல் – ஹமாஸ் சண்டையில், ஈரான் தலையிட்டதால், போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் எழுந்த சூழலில், அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் ஹமாஸ் மீது இஸ்ரேல் மூர்க்கத்தனமான தாக்குதலை தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.