உத்தம வில்லன் விவகாரம் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளிக்காமல் சென்றது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தேர்தலில் திமுக கூட்டணியினரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் அலை தமிழகத்தில் ஓய்ந்ததை தொடர்ந்து மீண்டும் தனது நடிப்புப் பணிக்கு திரும்பி விட்டார்.
தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். டெல்லியில் இந்த படத்தின் முதற்கட்டப் படிப்பிடிப்பு நடந்தது. இதில் இதில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது.
தற்போது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்பினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை சந்தித்து கேள்வி எழுப்பினர்.
தக் லைப் திரைப்படம் குறித்த கேள்விக்கு, அடுத்த வருடம் தக் லைப் திரைக்கு வரும் என்றார். அதுவும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என அறிவித்த தேதியில் திரைக்கு வரும்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸை ஆதரித்து வட இந்தியாவில் பிரச்சாரம் செய்வீர்களா என்னும் செய்தியாளர்களின் கேள்விக்கு, தேவை இருந்தால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.
அப்போது உத்தமவில்லன் திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பில் புகார் கூறப்படுவது குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் கமல்ஹாசன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதையும் படிங்க: ”தமிழகத்தில் சில மாவட்டங்களில் 65 கிமீ வேகத்தில் ..”