இளையராஜா, வைரமுத்து விவகாரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள சீமான், மொழி உடல் என்றால் இசை உயிர் என்று அடடே விளக்கத்தை அளித்திருக்கிறார்.
ஆதம் பாவா இயக்கத்தில் இயக்குநர் அமீர் நடிக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பிரத்யேக காட்சியினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் பார்த்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், படம் அருமையாக வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மக்களுக்குத் தேவையான அரசியல் கருத்துகளை நகைச்சுவையுடன் நையாண்டித்தனமாக உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.
அப்போது பாடல் பெரிதா, இசை பெரிதா என இளையராஜா, வைரமுத்து இடையே நடைபெறும் மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
கல்வியா, செல்வமா, வீரமா கதை இது? மறுபடியும் சரஸ்வதி சபதம்தான் எடுக்க வேண்டும். இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனைன்னு இருக்கிற கதைதான் அது. பாடலா? இசையா என்றால் இரண்டுமே முக்கியம்தான். ஒன்றையொன்று ஏன் பிரிக்க வேண்டும். மொழி உடல் என்றால் இசை உயிர். அது ஒரு மூச்சு. ஏன் அதைப் பிரிக்க வேண்டும்.
இரண்டு தகப்பன்களுக்கு இடையே நடக்கும் மோதலில் பிள்ளைகளை கொண்டுபோய் இழுத்துவிடக்கூடாது. அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை. இளையராஜா அப்பா கேட்பதில் நியாயம் இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: “நாய் வளர்ப்போர் இதை கண்டிப்பா பின்பற்றனும்..!” – சென்னை மாநகராட்சி அதிரடி!
ஹீரோ நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு கடந்த திரைக்கவர்ச்சி நமக்கு திணிக்கப்பட்டுள்ளது. அந்த ஹீரோ மேல மக்கள் வைக்கிற நம்பிக்கைய காப்பாத்திட்டார்னா ரீல் ஹீரோ இருந்தவரு, .ரியல் ஹீரோவாயிடப் போறாரு.
ஆனா எங்களுக்கெல்லாம் ரியல் ஹீரோ இருக்கிறார்னா அது அய்யா நல்லக்கண்ணுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.