ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எப்படி அமைகிறது என்பதை பொறுத்து தான் அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடுகள் அமையும் என்று கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கே.சி.பி. கூறியிருப்பதாவது.
எடப்பாடி பழனிசாமி நம்புவதை போல 20 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றிபெற்று விட்டால் அவரது தலைமை உறுதிசெய்யப்பட்டு விடும். அதன்பின் அதிமுக-வில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் EPS-ன் தலைமையை ஏற்றுக்கொண்டு மட்டுமே செயல்பட வேண்டும்.
ஒருவேளை 2-5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது வாக்கு சதவீதமும் 25% உட்பட்டுதான் கிடைக்கிறது என்றால், திமுக-வையும் பாஜகவையும் எதிர்த்து 2026-ல் ஆட்சி அமைக்க ஒன்றுபட்ட அதிமுக தேவை என்ற கோரிக்கை வலுப்பெறும்.
அல்லது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் 20% வாக்குகள் பெற்று, பாஜக கூட்டணி 15% பெற்று 5-6 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்கிற அளவு மோசமான தோல்வி என்கிற நிலை உருவானால் மாற்று தலைமை தேவை என்கிற கோரிக்கை வலுப்பெறும்.
2019 நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெரும். ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது தான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடரவேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியை பெற்றுத்தந்தால் மட்டும் தான் அவர் தலைமை தொடரும்.
இவ்வாறு கே.சி.பி. அதிமுக குறித்தும், அதன் தலைமை குறித்தும் தனது ஆரூடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
வெற்றியை பெற்றுத்தந்தால் மட்டும் தான் அவர் தலைமை தொடரும்