தற்போது நடைபெறும் மக்களவைக்கான தேர்தல் என்பது அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் வலைதளத்தில் ராகுல்காந்தி இட்டுள்ள புதிய பதிவில், சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் நிற்பதாக தெர்வித்துள்ளார்.
இதையும் படிங்க; தேர்தல் பிரசாரத்தில் மோடியின் விஷம பேச்சு – திமுக, காங்கிரஸ் கண்டனம்
மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது என்பது பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக மற்றொரு படியாகும் என்றும் ஆவேசம் காட்டி உள்ள ராகுல்காந்தி,
மீண்டும் சொல்கிறேன் – இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல் என்று பதிவிட்டுள்ளார்.
The true face of the dictator is once again in front of the country!