இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என்றும் பிரதமர் பேசியது தற்போது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடியின் பேச்சை சுட்டிக்காட்டி Rest in Peace….Election Commission of India என்று திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Rest in Peace….Election Commission of India
திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை, தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது! என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுளார்.
தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியும் தனது எக்ஸ் தளத்தில் மோடியின் மத துவேஷ பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“முதல்கட்ட வாக்குபதிவில் ஏமாற்றம் கிடைத்தபிறகு, பொய்கள் பலன் தராததால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மோடியின் விஷம பிரசாரத்துக்கு தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட முடிவுகளில் இந்தியா வெற்றி பெறுகிறது என்பதை இன்று மோடி ஜியின் பீதி நிறைந்த பேச்சு காட்டியது.
மோடி ஜி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட.
பதவிக்காகப் பொய் சொல்வது, ஆதாரமற்ற விஷயங்களைப் பற்றிக் கூறுவது, எதிரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைப்பது ஆர்எஸ்எஸ், பாஜகவின் பயிற்சியின் சிறப்பு.

நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாகப் போவதில்லை.
எங்களின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது. அனைவருக்கும் சமத்துவம் பற்றி பேசுகிறது. அனைவருக்கும் நீதி பற்றி பேசுகிறது.
காங்கிரஸின் நீதித்துறை உண்மையின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கோயபல்ஸ் வடிவில் உள்ள சர்வாதிகாரியின் சிம்மாசனம் இப்போது குலுங்குவது போல் தெரிகிறது.
இந்திய வரலாற்றில் மோடிஜி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை.
இவ்வாறு எக்ஸ் தளத்தில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அளவுக்கு யாரும் குறைத்ததில்லை