madurai candidate18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக,கொகதேக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு பகிந்து கொடுத்து விட்டு, மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாக திமுக போட்டியிடுகிறது .
அதற்கான வேட்பாளர் பட்டியலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அதனை தொடர்ந்து அதிமுக சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவிற்கான மக்களவை தேர்தல் கூட்டணி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தானது. இதனை தொடர்ந்து லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களைmadurai candidate எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அறிவித்த இந்த புதுமுக வேட்பாளர்கள் யார் தெரியுமா? முழு விபரம்!!
அதன்படி,
1 ) வட சென்னை – ஆர்.மனோ
2 ) தென் சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
4 ) அரக்கோணம் – A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி – கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) – J.பாக்யராஜ்
8 ) சேலம் – P.விக்னேஷ்
10 ) ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் – தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) – M.சந்திரகாசன்
13 ) நாகை – சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை – டாக்டர் P. சரவணன்
15 ) தேனி – V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் – பா. ஜெயபெருமாள்
இதையும் படிங்க : விளவங்கோடு இடைத்தேர்தல்; வேட்பாளர் அறிவிப்பில் முந்திய அதிமுக!!
அந்த வகையில் அதிமுக சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரவணன்madurai candidate அறிவிக்கப்பட்டு உள்ளார். இதில் திமுக கூட்டணியில் மதுரையில் சிபிஎம் சார்பாக தற்போது உள்ள எம்பி சு வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் சரவணன் சினிமா துறையில் இருந்து வந்தார்.அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து அதே படத்திலும் இவர் நடித்தார்.ஆனால் அந்த படம் சரியாக செல்லாத நிலையில் அரசியலுக்குள் நுழைந்தார். அரசியலுக்கு வந்து முதலில் மதிமுகவில் இருந்தவர் அதன்பின் பாஜகவிற்கு சென்றார்.அங்கிருந்து அப்படியே திமுகவில் இணைந்தார்.
திமுகவில் எம்எல்ஏவாகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனார். ஆனால் பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பாஜகவில் இணைந்தார்.
அதன்பின் ராணுவ வீரர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த பிடிஆர் வந்த அவரின் வாகனத்தில் செருப்பு வீசிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டார். இதில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினார்.
அதன்பின் இவர் மீண்டும் திமுகவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் சேர்ந்து மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கே கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக சு வெங்கடேசன் வென்றார். அதற்கு முன் அதிமுக சார்பாக கோபாலகிருஷ்ணன் வென்றார்.
இப்போது சு வெங்கடேசன் மற்றும் சரவணன் இடையே இங்கே போட்டி நடக்க உள்ளது