மயிலாடுதுறை மாவட்டம் Mayiladuthuraiதரங்கம்பாடி கடற்கரையில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம்(Mayiladuthurai) தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள சுற்றுலா மையமாக உள்ளது.
சுற்றுலா மையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில்சுற்றுலா மையத்தில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இன்று முழுமையான தூய்மை பணி நடைபெற்றது .
சுற்றுலா மையத்தில் மண்டி கிடந்த புதர்கள் அகற்றி குப்பைகளை அகற்றி தூய்மை பணி நடைபெற்றது இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் அவருடன் கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுள் இருந்தார்.
மேலும் நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் நாள்தோறும் தூய்மை பணி நடைபெற வேண்டும் எனவும் சுகாதாரம் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக செய்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.