கமுதி அருகே போத்தநதி கிராமத்தில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த வல்லந்தை ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநதி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா, ஒன்றிய தலைவர் மதன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பல் மருத்துவம், பொதுமருத்துவம், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதயம் சம்பந்தமான நோய்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மருத்துவ சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கினர்.
முதியவர்கள், சிறுவர், சிறுமியர் உள்பட 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பயன்பெற்றனர்.
இம்முகாமில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள், சக்கரை மாத்திரை, சத்து மாத்திரை, சளி மாத்திரை மற்றும் டானிக், வாய்ப்புண் சம்பந்தமான க்ரீம், டூத் பேஸ்ட், டூத் பிரஸ், மெளத் வாஷ் போன்றவை இலவசமாக வழங்கப் பட்டது.