மறைந்த நாகை எம்.பி. செல்வராஜின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்தவர் செல்வராஜ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆவார். கடந்த சிலமாதங்களாக உடல் நல பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகப் பிரச்சனை மற்றும் இதய பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 3ஆம் தேதி சென்னை கிண்டி அருகே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மே 14ஆம் தேதி அதிகாலை காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் மரணம் அடைந்த செல்வராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பட்டது.

இன்று(மே 15) பொதுமக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து தொடர்ந்து அவரது வீட்டின்பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வுகளில் ஊர் பொதுமக்கள், மூத்த அரசியல்வாதிகள், ஏராளமான கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நாகை நாடாளுமன்ற உறுப்பினர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சூறாவளி காற்றின் எதிரொலியாக..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!