சாதி மற்றும் வர்ண( சமூக பாகுபாடு)அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க ஆர்எஸ்எஸ் (RSS)தலைவர் மோகன் பகவத்(mohan-bhagwat) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்,சமூகத்தின் நலனை விரும்பும் ஒவ்வொரு நபரும் வர்ண மற்றும் சாதி அமைப்பு ஒரு பழைய சிந்தனை என்பதை உணர வேண்டும், மேலும் அதை இப்போது மறந்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,தவறுகளை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் , பாகுபாட்டை உருவாக்கும் எதையும் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார். இந்தியாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, முந்தைய தலைமுறையினர் கண்டிப்பாக தவறு செய்திருக்கிறார்கள். அந்தத் தவறுகளை ஒப்புக்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வர்ணாசரமத்திலும், சாதிகளிலும் எந்த பாகுபாடுகளும் தொடக்கத்தில் இருக்கவில்லை. இனி யாராவது வந்து இந்த கருத்தியல்களை பற்றி கேட்டால், அது முடிந்துவிட்ட ஒன்று, அதை பற்றி இனி மறந்துவிடலாம் என்று கூறுங்கள்” என்று பேசினார்.
மேலும் , சிறுபான்மையினர் மத்தியில் (ஆர் ஆர் எஸ்) இந்துக்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறு என்றும் யாரையும் அச்சுறுத்தாத, யாருடைய மிரட்டலையும் ஏற்காத இந்து சமுதாயமே நமக்கு வேண்டும்.
இது யாருக்கும் எதிரானது அல்ல. சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் அமைதியை (ஆர் ஆர் எஸ்) ஆதரிப்பதாக சங்கம் உறுதிமொழி எடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.