டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை (annamalai) சந்தித்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. இடுப்பளவு முதல் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர்.மழை வெள்ளம் தேங்கி 5 நாட்கள் ஆன நிலையில் மழைநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில்,டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.