பிரதமர் மோடியின் தெலுங்கானா பயணம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே,ஐதராபாத் வரும் பிரதமரை வரவேற்க அமைச்சர் ஒருவரை, கே.சி.சந்திரசேகரராவ் நியமித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தென் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு பிரதமர் வருகை தர உள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இரண்டு நிகழச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். படன்சேருவில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50 வது ஆண்டு விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து 11,360 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.சந்திரசேகரராவ் KChandrashekarRao முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை காரணமாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) கலந்து கொள்ள மாட்டார் என்றும்,
தெலுங்கானா மாநிலம் சார்பில் பிரதமரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தெலுங்கானா கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ்வை, சந்திரசேகர ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ.க., டி.ஆர்.எஸ். தலைவர்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கடந்த 2020 ஆண்டு பாரத் பயோடெக் நிறுவன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற போது சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.
மேலும் தெலுங்கானா பிரச்சனைகளை பிரதமர் மோடியிடம் முன்வைக்க இந்த வாய்ப்பை முதல்வர் கேசிஆர் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு தெலுங்கானா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை முதல்வர் கேசிஆர் தனது பயணத்தின் போது வரவேற்காதது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.