2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்னும் 3 பிரிவுகளில் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும் பத்ம விருதாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
2024 குடியரசு தினத்தின் போது, மொத்தம் 132 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 5பேருக்கு பத்ம விபூஷன், 17 நபர்களுக்கு பத்ம பூஷன் மற்றும் 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க; April 23 Gold Rate : அதிரடியாக சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
இவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 8 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், ஒன்பது பேருக்கு அவர்களது மரணத்திற்குப் பின் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பத்மவிருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுலப் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவிய பிந்தேஷ்வர் பதக், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் உள்ளிட்டோருக்குப் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இதில் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட பிந்தேஷ்வர் பதக் மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்கனவே மறைந்துவிட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருதினை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், உத்தரப் பிரதேச முன்னாள் கவர்னர் ராம் நாயக், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால் ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க; மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..!!!
பதம் விருதுகள் வழங்கும் நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வில், பாதிப் பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு அடுத்த வாரம் விருதுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.