பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணாக்கர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது வழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், 7 லட்சத்து 60ஆயிரத்து 606 மாணாக்கர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். மார்ச் 1ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 7லட்சத்து 19ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.56% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!