- மணத்தக்காளி வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.
- மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும்.
- தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.மணத்தக்காளிக்கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம்.
- மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும். மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு.
- மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல்.
- இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும்.
- ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.
- நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: சீதாப்பழ மரத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது. மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
- சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம்.
- மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.
- மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
- மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வருவது நின்றுவிடும்.
- மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும்.
- மணத்தக்காளியிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை.
- கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும்.
- உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும். வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும்.
- குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளி கீரை சிறந்த மருந்தாகும். காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும்.
- உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
- நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும். வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும்.
- கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.
- மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும்.
- மணத்தக்காளி இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்