எம்பி ஆக கூட தகுதி இல்லாத அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக இருப்பது அக்கட்சிக்கு நல்லது அல்ல என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட அனைத்து தொகுதிகளிலும் 40\40 திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்படி தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் சிவாமி வேலுமணி 3 லட்சத்து 97 ஆயிரத்து 738 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை பதிவு செய்தார்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயசீலன் 1 லட்சத்து 22 ஆயிரத்து 380 வாக்குகளை பெற்றார்.
இதனிடையே திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். மேலும் கனிமொழி எம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ”3வது முறையாக பாஜக ஆட்சி..” டைமிங்கில் ரய்மிங்காக சொன்ன வானதி சீனிவாசன்!
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கையை வைத்து வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கக்கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது போல ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
இன்று மாலை இந்தியா கூட்டணியினுடைய ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
அங்கேதான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். அண்ணாமலை என்னைப் பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார். ‘கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று?’ இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.
அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பாஜகவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது.மேலும் தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை என்பதையும் ஒருபோதும் தமிழகத்தில் தாமரை மலராது என்று தெரிவித்தார்.