தூத்துக்குடி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி , 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட அனைத்து தொகுதிகளிலும் 40\40 திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்படி தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் சிவாமி வேலுமணி 3 லட்சத்து 97 ஆயிரத்து 738 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை பதிவு செய்தார்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயசீலன் 1 லட்சத்து 22 ஆயிரத்து 380 வாக்குகளை பெற்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலை என்ன தகுதி இருக்கு..? 2வது முறையாக நான்..- கனிமொழி கொடுத்த நச் பதில்!
இதனிடையே திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். மேலும் கனிமொழி எம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
மேலும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் கனிமொழி கருணாநிதியைச் சந்தித்து வெற்றி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.