விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இடைத்தேர்தலானது ஜூலை 10ம் தேதியும்,வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுகள் கடந்த 14 ஆம் தேதி தொடங்கபட்டது. மேலும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி என அறிவித்துள்ளது. மேலும் தற்பொழுது வரை 7 வேட்புமனுகள் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டபட்டுள்ள அறிக்கையில் : நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வருகின்ற 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் வேட்புமனு பதிவு செய்யவிருக்கிறார்.
விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் காலை 08 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாசடி அருகில் உள்ள திருமலை சாமி மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.