‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் மேற்கொண்டு வரும் நடைபயணத்தை டிச.16-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அண்ணாமலை (annamalai) அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழலுக்கு எதிராக ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுர மாவட்டத்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரத்தையில் தமிழகம் முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை பேசி வருகிறார்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது நடைபயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்த அண்ணாமலை, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனது நடைபயணத்தை டிச.16-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அன்றைய தினம் திட்டமிட்டப்படி செஞ்சியில் இருந்து தொடங்கலாமா என்பது குறித்து பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.