தமிழ் நாட்டில் இருந்து வந்து பெங்களுருவில் குண்டு வைத்து செய்கிறார்கள் என தமிழர்கள் மீது அவதூறு பரப்பிய ஷோபா கரந்த்லாஜேவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த(2024) மார்ச் 1-ம் தேதி மதியம் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெடிகுண்டு விபத்தில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மேற்கு வங்கத்தில் முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா உள்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே,” தமிழர்கள் தான் வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று பாஜக மத்திய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.எந்த வித ஆதரமுமின்றி வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசிய மத்திய இணையமைச்சருக்கு கண்டனங்கள் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெங்களூரு குண்டு வெடிப்பு – மேற்குவங்கத்தில் இருவர் கைது
மேலும் மத்திய அமைச்சர் குறித்த பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் .
இவர் இப்படி கூறுவதற்கு NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது #RameshwaramCafeBlast உடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். அத்தகைய கூற்றுகளுக்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது. பாஜகவின் இந்த
பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் மறுப்பார்கள்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.பிரதமர் முதல் கேடர் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த வெறுப்புப் பேச்சை ECI கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார் .இந்த புதிய அமைச்சரரவையில், ஷோபாகரந்த்லாஜேவிற்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பேராசிரியர் எம்வி ராஜீவ் கவுடாவை எதிர்த்து 2,59,476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில், பதிவான 17,52,504 வாக்குகளில், ஷோபா 9,86,049 வாக்குகளையும், ராஜீவ் கவுடா 7,26,573 வாக்குகளையும் பெற்றனர்.
இதனால் அவருக்கு கட்சியிலும் செல்வாக்கு இருப்பதால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள தமிழகர்களை தரக்குறைவாக பேசிய ஷோபா கரந்த்லாஜேவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கலாமா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழர்கள் பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் பெருமையாக பேசி வரும் பிரதமர் மோடி ஷோபா கரந்த்லாஜேவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.