அண்ணாமலை பருப்பு இனி வேகாது.. கோமாளி அரசியலலை இனி நிறுத்தி கொள்ளுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுதியது.
மேலும் அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்தனர். அது மட்டும் இல்லாமல் அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு எடுப்பது மாநில தலைமை அல்ல , பாஜக தேசிய தலைமையும் மற்றும் பாஜக நாடாளுமன்றமும் தான் கருத்துகள் எழுந்தனர்.
இந்த நிலையில்,இது பற்றி விளக்கம் கேட்ட தான் தேசிய தலைவர் நட்டா மற்றும் அமித்ஷா அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சந்திப்பு வெறும் வழக்கமான சந்திப்பு தான் என்றும், கூட்டணியில் இருக்கும் பொது சில நேரங்களில் சிறு,சிறு பிரச்சனைகள் வார தான் செய்யும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா,மற்றும் அண்ணாமலை சந்திப்பு குறித்து பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கதில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில்,
டெல்லியில் நீ அழுத பிறகு , டேய் பச்சா போய் உன் வேலையைப் பார் என்று ஜி உன்னிடம் சொல்லிவிட்டாராமே. இனிமேல் உன் பருப்பு இங்கே வேகாது. இனி உன் கோமாளி அரசியலை நிறுத்துங்கள்.
டெல்லி உன்னை பார்த்து சிரித்தது நீ வெறும் காலி பாத்திரம் என்று, நீ நம்பர் 1 டகால்டி என்று அனைவருக்கும் தெரிய வந்தது. ஸ்டிங் ஆபரேஷன் 1 கிராம் தங்கம், அமர் பிரசாத் ரெட்டியின் 6 லட்சம் கோடி, மோடி கபடி லீக் வசூல், கே.டி.ஆர் ஹனி ட்ராப்,
மற்றவர்களை இழிவுபடுத்த யூடியூப்காரர்களுக்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள், உன்னாலே பல தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறினர், குண்டர்களின் உதவியுடன் பாஜக தலைவர்களை முடிக்க உங்கள் அடுத்த இலக்கு எல்லாம் இப்போது அம்பலமானது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அவர்,
சசிகலா அம்மா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை வைத்து அதிமுகவை உடைத்து பின்னர் நீங்கள் கொங்கு பெல்ட் தலைவராக ஆக முடியும் உங்கள் உத்தி சொன்ன பிறகு, டெல்லி ஜி உங்களிடம் உங்கள் இடுப்பு பெல்ட்டை முதலில் சரியாக அணியுமாறு உங்களிடம் சொல்லிவிட்டாராமே? #Annamalie #பொலிமலை
போலிமலை நீங்கள் தமிழக பாஜக வளர்க்கவில்லை, ஆனால் பீர், 1 கிராம் தங்க, கடிகாரம், பணம், டப்பு கொடுத்து 200 வார்ரூம் பன்றி கூட்டத்தை நிச்சயமாக வளர்த்திருக்கிறீர்கள். இது போலி பிம்பம் மட்டுமே என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.