மக்கள் பணி செய்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகை எம்.பி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நாகை எம்.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது;-
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு