செப்டம்பர் 15ஆம் தேதி நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி “நீ இந்துவாக இருக்கும் வரை சூத்திரன். நீ சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன். நீங்கள் இந்துவாக இருக்கும் வரை பஞ்சாயத்து மற்றும் இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்,” என்று தெரிவித்து இருந்தார்.மேலும் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இந்து முன்னணி கட்சி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கமளித்த ஆர்.ராசா,”
மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மான்பு. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை. நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க. நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்” எனக் கூறினார்.மேலும் இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ள அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திமுக எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில், திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரது நாக்கை அறுத்து கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார்.இது தொடர்பாக உத்தப்பநாயக்கணூர் போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இரு தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் `தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார்’ உள்ளிட்ட சில காட்டமான வார்த்தைகளுடன் பாலாஜி உத்தமராமசாமி பேசியிருந்த நிலையில்த.பெ.தி.க.வினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு போலீசார் கைது செய் து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்ப்பிடத்தக்கது .