பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.எவ்வளவு தான் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் பாலியல் வன்முறைகள், பலாத்காரங்கள் பல மோதல் சூழல்களில் பாலியல் சித்திரவதைகள் நடக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில்
14 வயது பெண்ணு நடந்த கொடுமை ‘ஷாக்’ கொடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்துள்ளது.
தங்கை என்று கூட பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானாள். 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே மாணவியை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது காவல்துறையினருக்கு விசாரணையில் தெரியவந்தது.உடன் பிறந்த தங்கையை அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.