பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த நிலையில், மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுநர்களின் கூட்டம் நடைபெற்றது.அதில், பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்,மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான பரப்புரையை பாஜக அகில இந்தியத் தலைவர் நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஒரே வாரத்தில் எப்படிக் கட்டிமுடித்துள்ளனர் என பார்த்த இடத்தில் இருந்த துறைமுகத்தை காணவில்லை செங்கல் ஒரே ஒரு கல் இருந்தது. அதுவும் இல்லை.
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு
அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை.ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை.
அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம். pic.twitter.com/q5LlgQc4qH
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 23, 2022
ஜப்பான் நிறுவனம் கடன் ஒதுக்கீடு செய்துவிட்டது ஆனால் கடந்த ஆண்டு March மாதம் உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. எனவே கபினேட் வைத்து உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் தமிழக அரசு போதுமான நிலத்தை ஒப்படைத்து விட்டது.பொய் சொல்வது முழு நேர வேலையாக வைத்துள்ளனர் BJPயினர் என்று மதுரை மக்களுக்கே மல்லிகை பூ சுற்றிய பாஜகவினர் என மாணிக்கம் தாகூர் M.P. வெங்கடேசன் என்று குற்றம் சாட்டியுள்ளார்
ஒரு பைசா ஒதுக்கீடு செய்யாமல் மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடி ஒதுக்கீடு செய்தாக பொய் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணைய ஒன்றிய அரசு தரமுடியுமா என மதுரை M.P வெங்கடேசன் கூறினார்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் JP நாட்ட முழு பூசனிக்காய் மறைக்கும் வேலையாய் எய்ம்ஸ் 95% வேலை முடிந்துள்ளது.
வடிவேல் கதை போல் கிணற்றைக் காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% கட்டிடத்தைக் காணவில்லை அதைத் தேடிக் கண்டு பிடிக்க வந்தோம். மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட து எனக் கூறியுள்ளார். தமிழக மக்களைத் தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது. எய்ம்ஸ் பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவல் பரப்புகிறது.
23 எய்மஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு செய்து ஜெயிக்கா நிறுவனத்திடம் நிதி பெற்று நடத்துகிறது மற்ற நிதி மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது
இதற்கான பணிகளை இதுவரை ஒன்றிய அரசு செய்யவில்லை. பாஜகவினர் மதுரை மக்களுக்கு மல்லிகை பூ சுற்றுகின்றனர். அண்ணாமலை முழு பூசனி சோற்றில் மறைகிறார்.90% சதம் ஜப்பான் செய்கிறது. இதில் ஒன்றிய அரசு செய்ய வேண்டிய வேலை மாநில அரசு இடத்தை ஒதுக்கித் தருவது மட்டுமே.22 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்.
404 Error: AIIMS Madurai not found | Congress' @manickamtagore interview#AIIMSMaduraiNotFound
Full interview: https://t.co/wXegZo1xvf pic.twitter.com/nqkBdJAnva
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) September 23, 2022
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும். இதே போல் மதுரை விமான நிலையத்திற்கு 540. கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனக் கூறுவது மதுரை மக்களை ஏமாற்று குன்ற வஞ்சிக்கின்ற செயல் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற
உறுப்பினர் த.வெங்க டேசன் கூறினர்.
இந்த நிலையில் ,மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக பேசியது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது ; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜெ.பி நட்டா கூறினார்;அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.