சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து பணத்தை முதலீடு செய்த இன்ஜினியர் 30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் அருண் பாண்டியன். இன்ஜினியரான இவர் தனது தொலைப்பேசியில் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து அதனுள் சென்றுள்ளார்.
அப்போது ஆன்லைனில் வருகின்ற சினிமா படங்களைப் பார்த்து படத்தைப் பற்றி மதிப்பெண்ணைக் குறிப்பிட்டால் முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக 10% வருமானம் வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி தனது instagram லிங்கை பார்த்து அதனுள் சென்று படத்தைப் பார்த்து மதிப்பெண் கொடுத்தவுடன் முதலீடு செய்த பத்தாயிரத்திற்கு உடனடியாக முதலீடு செய்த தொகையுடன் 11 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்துபோனது பணத்தைச் செலுத்தி பல்வேறு படங்களைப் பார்த்து அருண் பாண்டியன் அதற்கான மதிப்பீடுகளைச் செய்து கொடுத்து இருந்தார்.
ரூபாய் 31 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து விட்டு பணத்தைத் திரும்ப எடுக்க முயன்ற போது அவருடைய வங்கிக் கணக்கில் பணம் ஏதும் இல்லை அறிந்த அருண்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து சைபர் குற்றம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகார் பேரில் காவல் ஆணையர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
இந்த சம்பவம் குறித்து சைபர் ட்ரைன் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொதுமக்கள் தங்கள் அலைப்பேசியில், மெசேஜ் whatsapp instagram, பேஸ்புக் போன்றவற்றில் வருகின்ற லிங்கில் வரும் link கை உள்ளே திறந்து பார்க்க வேண்டாம்.
அப்படி அந்த link மூலமாக உள்ளே செல்லும் பொழுது உங்களுடைய cell phone ஹேக் செய்யப்படுகிறது. உங்கள் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் இணையவழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டு விடும்.
link மூலம் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தைப் பெறும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் மோசடிகள் நடத்த வருவதால் பொதுமக்கள் எச்சில் இருக்கும் இடம் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.