பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஹிந்துத்துவா சித்தாந்தத்தை பாஜக மக்கள் மத்தியில் புகுத்த நினைப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
உச்சநீதிமன்றம் #ஹிந்துத்துவா என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து ஜெயலலிதா அம்மா ஒரு ஹிந்துத்துவா தலைவர் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா அம்மா ஒரு ஹிந்துத்துவா தலைவர் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.
RSS அலுவலகத்தில் குண்டு வெடித்த பொழுது அதை அன்றைய தமிழக அரசுதான் கட்டிக் கொடுப்பதாக அறிவித்தது. ஜெயலலிதா அம்மாவோ அதிமுக கட்சியோ தன் நிதிகளில் இருந்து கட்டித் தருவதாக சொல்லவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைக்கிறார்கள்.
ராமர் கோவில் விவகாரத்தில் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் சென்று வருபவர்களும் ஹிந்துத்துவாவாதிகள் என்று அர்த்தமா? ராமர் கோவில் என்ன பாஜக தலைவர் அண்ணாமலை?
இதையும் படிங்க: ” இந்துத்துவ தலைவர் ஜெயலலிதா -”அண்ணாமலைக்கு சசிகலா பதிலடி!
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்த ஜெயலலிதா அம்மாவே மத்தியில் பாஜக ஆட்சியை கவிழ்த்தார் என்பதை ஏன் அண்ணாமலை மறந்துவிட்டார்?
அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் விவாதிக்க தயார் என்று என்கிறீர்களே எங்கு எப்போது என்று கூறுங்கள் விவாதிக்கலாம் திரு.அண்ணாமலை.
தமிழிசை அவர்கள் கூறிய அதே கருத்துக்களை அண்ணாமலையும் போட்டி போட்டு மீண்டும் தெரிவிப்பது. தமிழக பாஜகவில் அதிகார யுத்தம் நடப்பது போல் தெரிகிறது. ஆனால் இதில் எதற்காக அதிமுகவை இழுக்கிறீர்கள்.
பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஹிந்துத்துவா சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் புகுத்த நினைக்கிறீர்கள். அதை பாஜக தலைவர்கள் சொன்னால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக ஜெயலலிதா அம்மாவை பயன்படுத்துகிறீர்கள் உங்கள் உள்நோக்கம் புரிந்தது.
இந்த விஷ விதைகளை தமிழகத்தில் பரப்புவதற்கு #அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.