ராமநாதபுரம் மாவட்டத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்(Muthuramalingath Devar )பிறந்தார்.
முக்குலத்தோர் என்றும் அழைக்கப்படும் தேவர் சமூகம், அகமுடையார், கள்ளர் மற்றும் மறவர் ஆகிய மூன்று சமூகக் குழுக்களைக் கொண்டுள்ளது. முக்குலத்தோர் சமூகத்தினர் தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர்.முக்குலத்தோர்(Guru Puja Festival )சமூகத்தினரிடையே தெய்வமாக வணங்கப்படுகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராகவும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது முக்கிய பங்கு வகித்த அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.
சுபாஷ் சந்திரபோஸின் மிக நெருங்கிய உதவியாளரான முத்துராமலிங்கத் தேவர் அகில இந்திய தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு மூன்று முறை தேசிய நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.20ஆம் நூற்றாண்டு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவராகவும் ,பழங்குடியினர் சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு, தேவர் சமூகத்தின் ஆன்மீக ஆளுமையாக மாறினார். மேலும் அவருடைய நினைவு நாளான அக்டோபர் 30 ஆம் தேதியை தேவர் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி(Devar Jayanti) மற்றும் குருபூஜை விழா (Guru Puja)நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த விழாவில் பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபடுவதையும், பலர் சம்பிரதாயமாக கொண்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்(stalin) முதற்கொண்டு ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள் என்பதால் அரசு சார்பில் இப்போதே விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்(Muthuramalingath Devar) குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பிவிடுக்கபட்டு இருந்தது இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வருகிற 30-ந்தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி(modi) சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.