ஆங்கிலேயர்களுக்கு மருது சகோதரர்களை காட்டி கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மருது சகோதரர்கள் நினைவேந்தல் பொதுக்கூட்டதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன்திருமுருகன் காந்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன்,கலந்தது கொண்டு சிறப்புரையாற்றினார்.அதில்“ மருது சகோதரர்கள், ஆங்கிலேயரை எதிர்ப்பவர்களுடன் கூட்டு வைத்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்றனர்.
அதேபோல பாஜக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டு பலம் தான் வலிமையானது. தேர்தலில் தனியாக தான் நிற்பேன் என்பவர்கள் அரிச்சுவடி அரசியல்வாதிகள். தனித்துவம் என்பது வேறு, தனிமைப்படுவது என்பது வேறு. தனித்துவத்தை பாதுகாக்கவேண்டும் தனிமைப்பட்டு விடக்கூடாது, கூட்டு பலம் என்பதன் வலிமையிலும் வலிமையானது.
தலித்துகளை தனிமைப்படுத்த பஞ்சுமிட்டாய் தலைகள் என்று பாமக ராமதாஸ் கூறுவார். அவர் வாயை அடைத்த இயக்கம் விடுதலைச் சிறுத்தை இயக்கம்”தொடர்ந்து பேசிய அவர்,ஓபிஎஸ், இபிஎஸ் என்ற நிலையில் அதிமுக உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக உள்ளே நுழைந்து விட்டது.
ஆனால் “அதிமுக, திமுக போட்டியில் பாஜகவால் நுழைய முடியவில்லை. தற்போதுதமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேடிக்கை அரசியலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.