2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை என்பது கர்நாடக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை மறைக்கவே செய்யப்பட்டுள்ள தந்திரம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்து உள்ளார் .
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரூபாய் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் மதிப்பு நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்பணத்தில் பண மதிப்பிழப்பு வெகுவாக குறைத்து விட்ட நிலையில் அப்பனம் அச்சிடப்படுவதும் மூன்றாண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து திரும்பப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதனை மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள் 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் முகஸ்டாலினின் இந்த பதிவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்த உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டு உள்ள தனது ட்விட்டர் பக்கத்தில்,
கள்ளச்சாராயத்தால் 22 வருடங்கள் உயிரிழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் எழுப்பீடு திமுகவினர் நடத்தும் சாராய ஆளை டாஸ்மார்க் வருமானம் 50000 கோடி இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழை தேடி பாசமாய் எல்லாம் வேஷம்! என்று விமர்சித்துள்ளார்.