விழுப்புரம் மாவட்டத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் (anbu ashram) பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சென்ற அதிகாரிகள் அந்த ஆசிரமத்திற்குகடந்த மாதம் பிப்ரவரி 10 ஆம் தேதி சீல் வைத்தது
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள குண்டல புலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் (anbu ashram) மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 150க்கும் மேற்பட்டோர் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த ஆசிரமத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவர் தனது மாமனார் ஜவாஹிருல்லாவை சேர்த்துள்ளார்.
இதனையடுத்து, சலீம் தனது மாமாவை சந்திக்க அவரது ஆசிரமத்திற்கு சென்றபோது அங்கு ஜவாஹிருல்லா இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆசிரம நிர்வாகிகளிடம் சென்று தனது மாமா குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு, ஆசிரம நிர்வாகிகள் உரிய பதில் அளிக்காத காரணத்தினால் சலீம் உயர்நீதிமன்றத்தில் ஆசிரமத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் கடந்த 10ஆம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் உரிய முறையில் பராமரிக்கப் படாமல் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.மேலும், அந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலும் ஆசிரம மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்களில் 16 பேரை காணவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களை குரங்குகள் கடித்து குதறி வருவதாகவும், மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்களை வைத்து கடிக்க வைத்தாகவும் பகீர் தகவல் வெளியானது.
ஆசிரமத்தில் காணாமல் போனவர்கள் குரங்குகளால் தாக்கப்பட்டு உயிர் இழந்திருக்க கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, அந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ஆசிரமத்தில் இருந்தவர்களை மீட்டு அவர்களது வீடுகளுக்கு செல்ல காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆதரவற்றவர்களை வேறு ஒரு ஆசிரமத்திற்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண்மணி ஒருவர் பகீர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கொடுமை தாங்க முடியாமல் 4 ஆண்டுகளில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியந்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட் மற்றும் சீல்களை பயன்படுத்தி ஆசிரமவாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியுள்ளது. அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் எட்டு வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் மாத்திரைகள் ஆசிரமத்திற்கு சென்றது எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.