டெல்லி சென்று வந்ததிலிருந்து,தமிழக ஆளுநர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தொல் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக ஆளுநர் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்,தமிழக அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் மத்திய அரசின் வேறு பொறுப்பில் ஆளுநர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வருகின்றது” என தெரிவித்த அவர்,உடனடியாக தமிழக ஆளுநர் பொறுபில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து பாஜக ஆதரவு நிலைப்பாடு என்ற ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து பேசிய அவர்,
அதிமுக உட்கட்சி நிலவும் சூழலை வைத்து பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது . மேலும் தமிழ் நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றிபெற விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும் என்று தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நேரதத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர்,தமிழகத்தில் ஒன்றரை வருடத்தை ஆட்சி நிறைவு செய்ததை அடுத்து
“திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினார்.